குடியிருப்பு பகுதிகளில் நொண்டி நொண்டி நடந்து சென்ற சிறுத்தை -சிசிடிவி காட்சிகள் | Nilgiris | leopard
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 மாதங்களாக காலில் காயத்துடன் சிறுத்தை ஒன்று உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அருவங்காடு அருகே பாலாஜி நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நள்ளிரவில் கடந்து சென்றது. இந்நிலையில் தற்போது மீண்டும், அதே பகுதியில் காலில் காயத்துடன் அந்த சிறுத்தை சுற்றித் திரிவது சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது. காயத்துடன் சுற்றித் திரியும் சிறுத்தையை உடனடியாக பிடித்து, உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story