வீட்டில் வளர்க்கப்பட்ட சிறுத்தை தப்பியோட்டம் - ஆக்ரோஷமாக பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு
பாகிஸ்தானில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிறுத்தை, வெளியே தப்பியோடி பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட சிறுத்தை ஒன்று, வெளியே தப்பியோடியது.
அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததோடு, தெருக்களில் சென்றவர்களையும் துரத்தி துரத்தி தாக்கியது.
ஆக்ரோஷமாக சிறுத்தை இருந்ததால் பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். சிறுத்தை தாக்கும் வீடியோக்கள் பலர் பகிர்ந்து பொதுமக்களை எச்சரித்தனர்.
தகவலறிந்து சென்ற வனத்துறையினரும், போலீசாரும், 6 மணி நேரம் போராடி சிறுத்தையை பிடித்தனர்.
Next Story