ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை வி.வசந்தா காலமானார்
பழம்பெரும் நடிகை வி. வசந்தா, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வி. வசந்தா. நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், 'இரவும் பகலும்' படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும், 'கார்த்திகை தீபம்' படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். 'மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும், 'ராணுவ வீரன்' படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாகவும் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வி. வசந்தார், சென்னையில் காலமானார்.
Next Story