"வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய வேண்டாம்" - வெளியான அறிக்கை

x

கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்களித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி. தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டு தோறும் ஏப்ரல் 1 - ம் தேதி முதல் ஜூன் 30 - ம் தேதி வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்