இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

மாமல்லபுரத்தில் துவங்கியது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்... முதல் நாளிலேயே வெற்றி வாகை சூடி, இந்திய வீரர்கள் அபாரம்

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரம் இன்றைய நிலையை விட மிக பெரியதாக இருக்கும்..." - குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைப்பது குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை - அதிமுக சார்பாக யார் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை - உயர்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு

உயிரிழந்த மாணவி மரணத்திற்கு நியாயம் வேண்டி சிபிஐ விசாரணை வரை செல்ல தயார் - ஸ்ரீமதியின் தாய் செல்வி திட்டவட்டம்

கோவை அரசு உயர்நிலைப்பள்ளியில் பாலியல் புகார்... மாணவிகளிடம் அத்து மீறிய ஆசிரியர் - பெற்றோர் வாக்குவாதத்தால் பரபரப்பு

குடியரசுத்தலைவரை அவதூறாக பேசிய சர்ச்சை - தவறான வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியதாக, கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு பதிலளிக்க உத்தரவு

பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்கம்பியில் யானை உயிரிழந்த சம்பவம்... வனச்சரக அலுவலர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் - பணியில் கவனக்குறைவாக இருந்ததால் நடவடிக்கை

சென்னை அருகே பெருங்குடியில் கிணற்றை சுத்தம் செய்த போது விபரீதம் - விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு... போலீசார் விசாரணை

பூ வியாபாரியின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து மாற்றிய ஆன்-லைன் கும்பல் - அதிரடியாக பணத்தை மீட்டது சைபர் கிரைம்

கேரளாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸின் தனி பணியாளர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு - ஆளுநர் ஆரிப் முகமது கான் அதிருப்தி

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா கோலாகலம் - 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி

அதிமுக விவகாரத்தில் மீண்டும் தர்மமே வெல்லும் என, ஓ.பி.எஸ் உறுதி - பிரதமரை வழியனுப்பி வைத்த பின் விமான நிலையத்தில் பேட்டி

ரேஷன் கடைகளில் அரிசியின் தரத்தை பரிசோதித்து அனுப்ப வேண்டும் - கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை

உணவுப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி விதிப்பை திரும்பப்பெற வேண்டும் - தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி விதிப்புக்கு எதிர்ப்பு... சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி எதிரொலி - நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைப்பு

"இலங்கையில் பொருளாதார கொள்கைகளை கட்டமைக்கும் வரை புதிதாக நிதி வழங்க போவதில்லை..." - உலக வங்கி திட்டவட்டம்


Next Story

மேலும் செய்திகள்