உத்தராகண்டில் கடும் நிலச்சரிவு - மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு...
உத்தராகண்ட மாநிலம் ஜோஷிமத் (Joshimath) நகரத்தில் உள்ள மக்களை, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஜோஷிமத் நகரத்தில் தொடர் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள சுமார் 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், நிலச்சரிவு குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்த பரிந்துரைகளை வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story