ஐயப்பனை காண லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... ரூ. 200 கோடியை தாண்டிய காணிக்கை... | Sabarimala
சபரிமலையில் 39 நாட்களில் 222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அங்கு கடந்த மாதம்16 தேதி மாலை நடைதிறக்கப்பட்டு,17 தேதி முதல் மண்டல காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது, செவ்வாய்க்கிழமையுடன் மண்டலபூஜை நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 39 நாட்களில் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த சீசனில் சபரிமலைக்கு 20 சதவீதம் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான தனி சிறப்பு வரிசை பயனுள்ளதாக இருந்தாக தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் சபரிமலையின் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், 222 கோடியே 98 லட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.