3-ஆம் வகுப்பு மாணவர்களை மூங்கில் கம்பால் வெளுத்தெடுத்த ஆசிரியை..!
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் தேர்வு சரியாக எழுதவில்லை எனக் கூறி குழந்தைகளை ஆசிரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏலகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஏலகிரி அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். அங்கு படிக்கும் 3-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜீவா என்ற ஆசிரியை, ஆங்கிலத் தேர்வு வைத்துள்ளார். அந்த தேர்வை சரியாக எழுதவில்லை எனக் கூறி, மூங்கில் கம்பால், மாணவ, மாணவிகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மாலை வீட்டுக்குச் சென்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர் தாக்கியது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். குழந்தைகளின் தலையிலும், கால்களிலும் காயங்களைப் பார்த்து பதறிய பெற்றோர், அவர்களை ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.