பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை
பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பெண் தற்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்காக மாற்றிய போலீசார், பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே நேமம் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வதி என்ற பெண் தீக்காயங்களுடன் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், கணவர் ரதீஷ் மீது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில், கணவர் ரதீஷ், அஸ்வதியை தீயிட்டுக் கொளுத்தியது தெரியவந்தது.
Next Story