மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை... விபத்தில் சிக்கிய இளைஞரை கையில் தூக்கி சென்ற நண்பர்கள்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வண்டி தள்ளுவதற்கு கூட ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், விபத்தில் சிக்கிய இளைஞரை, கையில் தூக்கிக்கொண்டு பரிசோதனை கூடத்திற்கு செல்லும் வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர் செவிலியரும் இல்லாததால், நோயாளிகளை கவனிக்கவும் பராமரிக்கவும் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டம் முழுவதில் இருந்து தினம் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story