முழு வீச்சில் நடைபெறும் குறுவை சாகுபடி.. கண்ணைக்கவரும் கழுகு பார்வை காட்சிகள்.!!
முழு வீச்சில் நடைபெறும் குறுவை சாகுபடி.. கண்ணைக்கவரும் கழுகு பார்வை காட்சிகள்.!!
தஞ்சை டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் குறுவை சாகுபடியை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story