நாகநாதசுவாமி கோயிலில் பெருவிழா... இசை வெள்ளத்தில் சொக்கிப் போன மக்கள்

x

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்கள் 1 மணி நேரம் வாசித்த மல்லாரி இசை அனைவரையும் சொக்கச் செய்தது.

திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் அருகே வானூர் அடுத்த திருவக்கரையில் பழமையான சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பின், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் மோகன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

குன்றத்தூர் நாகேஸ்வர சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள நாகேஸ்வர சாமி கோயிலில், ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்