தாய், தந்தையை கொன்றுவிட்டு... சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் - வீட்டில் வீசிய துர்நாற்றம்
கும்பகோணம் அருகே, தாய் மற்றும் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே தில்லையம்பூரில் கிராமத்தில்,கோவிந்தராஜ் - லட்சுமி மூத்த தம்பதிக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், தனது தாய் மற்றும் தந்தையை கொலைசெய்து விட்டு, உடல்களை வீட்டிலேயே வைத்துள்ளார். வீட்டிலேயே சமைத்தும் சாப்பிட்டு வந்துள்ளார். அப்பகுதி வழியே நடந்து சென்றவர்கள், வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து , வீட்டிற்குள் சென்று பார்த்த போலீசார், அங்கிருந்து ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றியதுடன், பெற்றோரை, மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் கொலை செய்ததாக கூறி, அவரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.