திமுகவில் இருந்து சஸ்பெண்ட்..மறுநாளே வெளியிட்ட சர்ச்சை வீடியோ-பரபரப்பை கிளப்பிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவால் திமுக வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். சமூக வலைதளங்களில் காங்கிரஸ் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தனது சமூக வலைதள பக்கத்தில் தனது மேடைப் பேச்சு ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சக கட்சியினரின் ஆட்சேபனையையும் மீறி, ஈழம் குறித்த திமுகவின் நிலைப்பாடு பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இதனை நண்பர்களின் பார்வைக்கு எனச் சொல்லி பகிர்ந்துள்ள ராதாகிருஷ்ணன், இது எனது இயல்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.