குடிநீர்த் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரர் மனைவி...திமுக கவுன்சிலர் கண்டித்ததால் வாய்த் தகராறு
- வேலம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரனும், அவருடைய தம்பி பிரபுவும் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார்கள்
- . பிரபாகரனின் மனைவி பிரியா, வீட்டுக்கு அருகில் இருந்த குடிநீர் தொட்டி அருகே துணி வைத்துக் கொண்டிருந்தை திமுக கவுன்சிலர் சின்னசாமி கண்டித்துள்ளார்.
- இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- இந்த சம்பவத்தால் ஆத்திரத்தில் இருந்த சின்னசாமி தனது உறவினர்கள் 10 பேரை அழைத்துச் சென்று பிரபாகரனையும், பிரபுவையும் கற்களாலும், இரும்பு ஆயுதங்களாலும் தாக்கியதாகத் தெரிகிறது.
- இதில், பலத்த காயம் அடைந்த பிரபு, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தலைமறைவாக இருக்கும் கவுன்சிலர் சின்னசாமி, புலிப்பாண்டி, காளியப்பன் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
Next Story