"கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல்" - அண்ணாமலை பரபரப்பு தகவல்

கோவையில் நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதல், சிலிண்டர் வெடிப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
x

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 வாரங்களாக தமிழக பாஜக சொன்னதை தேசியப் புலனாய்வு முகமை உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை சிலிண்டர் விபத்து என்று கூறி திறனற்ற திமுக அரசு இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறிய அவர், தமிழகத்தில் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் வேரூன்றி விட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். உளவுப் பிரிவின் செயலற்ற தன்மையால் நிகழவிருந்த பெரும் உயிர் சேதத்தில் இருந்து இறைவன்தான் நம்மைக் காப்பாற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்