தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - சிறையில் நடந்த 3 மணிநேர விசாரணை
கோவை சம்பவத்தில் கைதான ஆறு பேரிடம், என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 மணி நேரம் சிறையில் விசாரணை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்களை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள், நேரடியாக கோவை சிறைக்கு சென்று ஆறு பேரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. ஜமிஷா முபீனின் உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் ஆகியோரிடமும், வீட்டை காலி செய்ய உதவிய பெரோஸ், நிவாஸ், ரியாஸ் ஆகியோரிடமும், கார் கொடுத்த முகமது தல்ஹாவிடமும் தேசிய பாதுகாப்பு முகமை் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Next Story