கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு...இன்று காலை 10 மணிக்கு...

x

நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில், 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கர்சன் செல்வம், மணிகண்டன், ஜெயசீலன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோவை காவலர் பயிற்சி மையத்தில் உள்ள சிபிசிஐடி விசாரணை மையத்தில், இன்று காலை 10 மணிக்கு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்