கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை... ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளி நீர் வீழ்ச்சி
- கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. செண்பகனூர், உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது.
- சுமார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொடைக்கானல் மலைப்பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Next Story