#JUSTIN | ஒரே நேரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நெரிசலில் திணறும் கொடைக்கானல்

x

கொடைக்கானலில் மலர் கண்காட்சியை காண குவிந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மலைச்சாலையில் சுமார் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இர‌ண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பு.

கொடைக்கானலில் கோடை விழா ம‌ற்றும் 2ஆம் நாள் மலர்கண்காட்சியானது இன்று நடைபெறுகிறது, இதனையடுத்து தமிழகமட்டுமின்றி, கேர‌ளா, க‌ர்நாட‌கா, ஆந்திரா உள்ளிட்ட‌ வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது, இதன் காரணமாக மூஞ்சிக்கல், உகார்த்தேநகர்,செண்பகனூர், பெருமாள்மலை, புலிச்சோலை உள்ளிட்ட மலைச்சாலைகளில் சுமார் இர‌ண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் மலைச்சாலையில் காத்திருந்து ஊர்ந்தபடி த‌ங்க‌ள‌து ப‌ய‌ண‌த்தை தொட‌ர்கின்ற‌ன‌ர், இதனால் சுற்றுலாப்பயணிகள் உரிய‌ நேர‌த்தில் சுற்றுலா தலங்களுக்குள் செல்ல முடியாமலும்,அன்றாட பணிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர்,மேலும் மலைச்சாலையில் பெண்கள்,சிறுவர்கள் நீண்ட‌ நேர‌ம் காத்திருந்து த‌ங்க‌ள‌து பயணத்தை தொடர்வதால் மலைச்சாலைகளில் கழிப்பறை வசதி இல்லாமல் பெறும் அவதியடைந்து வருவதாக சுற்றுலாப்பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர், இதனை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மலைச்சாலைகளில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ச‌திக்காக‌ கழிப்பறைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகன நிறுத்தம் இடங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருகையால் கொடைக்கானல் ந‌க‌ர் விழாக்கோல‌ம் பூண்டுள்ள‌தும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்