வேகமெடுக்கும் கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு: திங்கட்கிழமை வெளியாகும் முக்கிய அறிக்கை
ராமஜெயம் கொலை வழக்கில் 11 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
கே. என். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை வேகமெடுத்திருக்கும் நிலையில் ரவுடிகள் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கு 12 பேர் சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் மொத்தம் 11 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் என்கிற சண்முகம் மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதேபோல் 13 வது நபரான செந்திலுக்கு கடலூரில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் அவர்கள் வரும் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மை கண்டறியும் சோதனை எப்போது நடத்தப்படும்? என்ற தகவல் தெரியவரும்...