கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. இன்னும் திறக்காதது ஏன்..?அமைச்சர் சேகர் பாபு ஆவேசமாகப் பதில்..
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அமைச்சர்கள் சேகர் பாபு, ராமச்சந்திரன் மற்றும் துறையின் செயலாளர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டும்போது, முறையான திட்டமிடல்கள் இன்றி கட்டப்பட்டதாக கூறினார். சிறு மழைக்கே பேருந்து நிலையத்திற்குள் மழை நீர் தேங்கி இருப்பதாகவும், அந்த மழை நீரை வடிவதற்கான கால்வாய் அமைக்கப் பணிகள் 13 கோடி ரூபாய் செலவில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். கடந்த ஆட்சியில் குளறுபடியால் 25 சதவீதம் கூடுதல் நிதி செலவாகுவதாக அமைச்சர் கூறினார்.
Next Story