நடிகை அதியாவை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்..!
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தனது காதலியான நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. பாலிவுட் நடிகையான இவரும், கே.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன், புனேவின் கந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. வேறு நபர்களுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், மணமக்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்று வாழ்த்தினர். திருமண புகைப்படங்களை, கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Next Story