பாஜக ஆதரவாளர் கிஷோர் கே. சாமியின் ஜாமின் மனு தள்ளுபடி
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சாமியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மழை வெள்ள பாதிப்பின்போது முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை விமர்சிக்கும் வகையில், பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர்.
இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே சாமி, முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Next Story