நிலத்தகராறில் உறவினர் வெறிச்செயல் - தாய், மகனுக்கு நடந்த கொடூரம்
தருமபுரி அருகே, நிலத்தகராறின்போது, இரும்பு ராடால் தாக்கியதில் தாய் மற்றும் உயிரிழந்த சம்பவத்தில், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கும், அவரது உறவினர் பெரியசாமிக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ராஜமாணிக்கம் தனது பழனியம்மாளுடன், வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பெரியசாமி, அவர்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த பெரியசாமி, இரும்பு ராடால் தாக்கியதில், ராஜமாணிக்கம் மற்றும் அவரது தாய் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள பெரியசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.