தனி ஒரு அரசனாக நின்று வரலாறு படைக்க போகும் 'கிங்' கோலி - தோனி Finish.. அடுத்தது சச்சின் தான்
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில், இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 87 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது 500-வது போட்டியாகும். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் உட்பட வேறு எந்த வீரரும், தங்களுடைய 500வது போட்டியில் சதமடித்ததில்லை. ஒரு வேளை இந்த போட்டியில் 3 இலக்க ரன்களை தொடும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது போட்டியில் சதமடிக்கும் முதல் வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது....