சுயமரியாதை திருமணம் செய்த பெண் கடத்தல்...மீட்டுத் தரக்கோரி இளைஞர் நீதிமன்றத்தில் மனு

x

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த இளவரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த மாதம் தனது காதலியை இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி சுயமாரியாதை திருமணம் செய்து கொண்டதாகவும், வழக்கறிஞரின் முன்பு நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வழக்கறிஞர் சான்றிதழ் அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தனது மனைவியை அவர்களது உறவினர்கள் கடத்தி சென்றதாகவும், அவரை மீட்டு தரும்படியும் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் முன்பு நடைபெறும் திருமணம் செல்லாது என ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், சுயமரியாதை திருமணம் தனது முன்னிலையில் நடந்ததாக சான்று அளித்த வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற உத்தரவிட்டார். தொடர்ந்து இதேபோல் வேறெங்கும் திருமணம் நடைபெற்றுள்ளதா என விசாரணை நடத்த கூறி, வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்