பெண்ணைக் கடத்தி வைத்து துன்புறுத்தல்.. தொழில் பார்ட்னர் எனக்கூறி ரூ.3 கோடி ஏமாற்றிய நபர்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீனா என்பவர், தனது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அழகுநிலையம் ஒன்றை நடத்தி வந்தார். வாடிக்கையாளரான தமிழ்செல்வியின் கணவர் சிவகுமார் என்பவர், ஜவுளி தொழில் செய்ய பிரவீனாவை பார்ட்னராக சேர்த்துள்ளார். இதற்காக தான் வசித்த வீட்டை அடகு வைத்து, 3 கோடி ரூபாய்க்கு மேல் சிவகுமார் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. வீட்டு சொத்து பத்திரம் ஏலத்திற்கு வந்தபோது, பணத்தைக் கேட்டபோது, தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் செல்வதாகக் கூறி, திருச்சியில் தன்னை அடைத்து வைத்து துன்புறுத்தியதுடன், சிவகுமார் சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுச் சென்றதாக பிரவீனா தெரிவித்துள்ளார். சிவகுமாரிடம் இருந்த தன்னை காப்பாற்றுங்கள் என அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே, மகள் காணாமல் போனதாக பிரவினா தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்