கடத்தப்பட்ட 7 மாத குழந்தை - பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் இருந்து மீட்பு - வெளியான பரபரப்பு தகவல்
மதுரா ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 7 மாத கைக்குழந்தையை ஒருவர் தூக்கி கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியானது. குழந்தையை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பெரோசாபாத்தில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் குழந்தை இருப்பது தெரிய வந்தது. பாஜகவை சேர்ந்த வனிதா அகர்வால் குழந்தையை இரு மருத்துவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர். தொடர் விசாரணையில் கடத்தல் கும்பலால் குழந்தை கடத்தப்பட்டதும், மருத்துவர்களின் உதவியுடன் விற்கப்பட்டதும் அம்பலமானது. வனிதா அகர்வாலிற்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதால் கடத்தப்பட்ட குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில் குழந்தை கடத்தல் வழக்கில், சிசிடிவி கேமராவில் பதிவான நபர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.