மாணவர்கள் கடத்தலா? வடமாநில இளைஞருக்கு அடி, உதை.. தேனி பள்ளியில் பரபரப்பு

x

மாணவர்கள் கடத்தலா? வடமாநில இளைஞருக்கு அடி, உதை.. தேனி பள்ளியில் பரபரப்பு

தேனி மாவட்டம், போடி அருகே, தொடக்கப் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதாக வந்த தகவலால், போர்வை விற்க வந்த வடமாநில இளைஞரை பெற்றோர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சில்லமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் பள்ளிக்கு வராததால், அவர்களின் பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் தகவல் கொடுத்துள்ளார். பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர், அந்தப் பகுதியில் மாணவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது எதிரில் வந்த ஒரு மாணவன், வடநாட்டு இளைஞர் ஒருவர் தங்களை கடத்த முயற்சித்ததாக கூறினான். பின்னர், அருகில் உள்ள தெருவில் மாணவர்கள் இருப்பது தெரியவந்தது. அப்போது, அங்கு போர்வை விற்க வந்த வட மாநில இளைஞரை, குழந்தை கடத்துபவர் என நினைத்து தர்ம அடி கொடுத்து, காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து, மாணவர்களை பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தீர விசாரித்தபோது, சிறுவர்கள் யாரும் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்