"2 மாஜி அமைச்சர்கள் ஓட்டல் அறைக்கு அழைத்தனர்" - கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஸ்வப்னா
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சமீபத்தில் 'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.
அதில் கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், பினராய் விஜயனின் அலுவலகத்தை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் தம்மை பலமுறை படுக்கைக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்வப்னாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ் அவருக்கு பதிலிளிக்கும் விதமாக அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது எளிமையான மற்றும் அடக்கமான பதில். தம் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும், மீதமுள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போவதாக கூறி ஸ்வப்னா சுரேஷ் முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.