படகில் செல்லும்போது கடலில் குதித்து உயிரை மாய்த்த நபர் - பின்னணியில் பயங்கரம்.. ஷாக்கில் போலீஸ்
கேரளாவில், குடும்பத்தகராறில் மனைவியைக் கொலை செய்த நபர், கடலில் குதித்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே சிறால் பகுதியை சேர்ந்தவர் சசிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் தனது மனைவியை சசி அடித்துக் கொன்றுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், கொச்சி பகுதிக்கு செல்லும் படகில் ஏறியுள்ளார்.
ஆழமான பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது, திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட வேறொரு படகில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து சசியை காப்பாற்ற முயன்றனர்.
எனினும், அவர் சடலமாகவே மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story