2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு - மழலையர்களை வரவேற்ற கேரள அமைச்சர்கள்

கோடை விடுமுறைக்கு பிறகு கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
x

கேரளாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல ஜூன் 1 - ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மாணவர்களுக்கு பூக்கள், பலூன், சாக்லெட் மற்றும் இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளி தொடக்க விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர். இதேபோல் இடுக்கியில் நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் பங்கேற்று பள்ளி குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த வருடம் பொதுக்கல்வி நிறுவனங்களில் 43 லட்சம் மாணவர்கள் படிக்க உள்ளதாகவும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறினார். இதற்கிடையே ஓடாமல் இருக்கும் கேரள அரசு பேருந்துகளை, வகுப்பறைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, திருவனந்தபுரம் மணக்காட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு 4 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறையாக மாற்றப்பட்ட பேருந்து வழங்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்