ஒட்டு மொத்த கேரளாவையும் அதிர வைத்த குப்பை கிடங்கு தீ விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

x
  • கொச்சி பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ விபத்தால் வெளியேறிய புகை, நச்சுத்தன்மை வாய்ந்தது என்று இந்திய மருத்துவ சங்கத்தின் கொச்சி பிரிவு தெரிவித்துள்ளது.
  • கொச்சி பிரம்மாபுரம் பகுதியில் 110 ஏக்கரில் கொச்சி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
  • 5 நாட்களுக்குப் பிறகு 7ஆம் தேதி தீ அணைக்கப்பட்டது.
  • இருந்தாலும் புகை தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் கடந்த 9 நாட்களாக கொச்சி நகரின் பல பகுதிகள் புகை மண்டலமாக மாறியுள்ளன.
  • இந்த குப்பைக் கிடங்கில் அதிக அளவில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேறுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் கொச்சி பிரிவு தெரிவித்துள்ளது.
  • இதனால், மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளை இப்போது கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்