"அரிக்கொம்பன் ஆட்டம் ஓவர்...அடுத்த கொம்பனின் ஆட்டம் ஆரம்பம்.." - மீண்டும் பீதியில் மக்கள்
கேரள மாநிலம் இடுக்கியில் அரிக்கொம்பனின் அட்டகாசம் ஓய்ந்த நிலையில், சக்கை கொம்பன் யானையின் அட்டகாசம் தீவிரமடைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆனையிரங்கல் பகுதியில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக காணப்பட்ட மூன்று கடைகளை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் அந்தச் சாலை வழியாக செல்ல தயங்கினர். பின்னர் அந்த யானை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்ற பிறகு மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரிக்கொம்பனின் அச்சத்தில் இருந்த பொதுமக்கள் தற்போது அதிலிருந்து விடுபட்ட நிலையில், சக்கை கொம்பனை கண்டு அஞ்ச தொடங்கியுள்ளனர். சக்கை கொம்பனை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.