விடாமல் விரட்டிய மதம் பிடித்த யானைகள் - மிரண்டுபோன பக்தர்கள்
மதம் பிடித்த யானைகள் - அச்சமடைந்த பக்தர்கள்
கேரளாவில், கோயில் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்த சம்பவம், பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. கேரள மாநிலம், கண்ணூர் செறுகுல்லா பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் ஊர்வலத்திற்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டன. அப்போது திடீரென இரண்டு யானைகளுக்கும் மதம் பிடித்து, அங்கிருந்த பந்தல் மற்றும் பொருட்களை தும்பிக்கையால் இடித்து சேதப்படுத்தின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Next Story
