திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. அலறியடித்து ஓடிய ஐயப்ப பக்தர்கள்

x

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள வண்டி பெரியார் என்னும் இடத்தில் ஐயப்ப பக்தர்களின் கார் தீப்பிடித்து எரிந்தது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து சபரிமலைக்கு வந்த 5 ஐயப்ப பக்தர்கள் வந்தனர். அப்போது கார் திடீரென்று தீப்பிடித்தது. உடனடியாக காரில் இருந்து பக்தர்கள் அலறியடித்த படி வெளியே ஓடி வந்தனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த பீருமேடு தீயணைப்புத்துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்