300 அடி பள்ளத்தில் குதித்து குளியல்.. இளைஞரின் உயிரைக் குடித்த "தண்ணீ" - சிக்கிய சக நண்பர்கள்..
- சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பரத், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில், தனது நண்பர்கள் 3 பேருடன் மது அருந்தியுள்ளார்.
- பின்னர் நால்வரும் கல்குவாரியில் 300 அடி ஆழம் கொண்ட நீர்நிலையில் குளித்துள்ளனர்.
- அப்போது பரத் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
- இதனைத்தொடர்ந்து அவரது உடலை 9 பேர் கொண்ட ஸ்கூபா டைவிங் குழுவினர் மீட்டனர்.
- இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பரத்தின் நண்பர்கள் மூவரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனிடையே, கல்குவாரியில் குளிக்க தடை விதித்து, சாலையை பாறைகளால் அடைத்த போலீசார், மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
Next Story