மனைவியோடு குழாயடி சண்டை போட்ட பெண்ணை வீடு புகுந்து வெட்டி கொன்ற நபர்.. ஒன்றும் செய்யாத கணவனுக்கும் வெட்டு - கரூரில் அதிர்ச்சி
- கரூர் அருகே தனது மனைவியுடன் தண்ணீர் குழாயில் சண்டை போட்ட பெண்ணை கணவன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.
- இவரின் மனைவி, வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றதாகவும், அப்போது பத்மாவதி என்பவருடன் குழாயில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- இதனை கார்த்திக்கிடம் அவரது மனைவி தெரிவித்த நிலையில், பத்மாவதியின் வீட்டிற்கு சென்ற கார்த்திக், பத்மாவதியையும், அவரது கணவரையும் அரிவாளால் வெட்டி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதில், இருவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சம்பவத்தில் தப்பியோடிய கார்த்திக்கை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story