காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உயிரிழந்த விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு கல்வியாளர்கள் வலியுறுத்தல்
- கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உயிரிழந்தது போன்ற சோக சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, கல்வித்துறையின் அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- அனுமதியின்றி மாயனூர் காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மாணவிகளில் நால்வர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
- இந்தநிலையில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தல் மீறப்பட்டதே, அந்த விபத்துக்கு காரணம் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- மாணவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அவர்களது பயணத்தை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story