திருமணமான 2 வாரத்தில் நடந்த சோகம்.. கண்ணீர் மல்க வீடியோ வெளியீட்டு - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
- கரூரில் தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு என்பதை அறிந்த இளம்பெண் திருமணமான 2 வாரங்களில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா.
- 27 வயதான இவருக்கு சுதர்சன் என்பவருடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக திருமணம் நடந்திருக்கிறது.
- இதனிடையே சுதர்சனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததை அறிந்திருக்கிறார் ராகப்பிரியா.
- இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த ராகப்பிரியா தன் வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
- இறப்பதற்கு முன்பாக தன் கணவர் குறித்தும், அவரின் தகாத உறவு குறித்தும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அது இணையத்தில் பரவி வருகிறது..
Next Story