ஆசை ஆசையாக சென்ற ஹனிமூன்... சுட சுட நண்டு சாப்பிட்டதால் நேர்ந்த சோகம் - துடி துடித்து இறந்த மனைவி

x

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிருபா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத்தம்பதியான இருவரும், கன்னியாகுமாரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள விடுதி ஒன்றில் தம்பதி தங்கியிருந்த நிலையில், விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தம்பதி இருவரும் விரும்பி சாப்பிட்டுள்ளனர். அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்ட மனைவியை, கணவன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இளம் பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், இளம்பெண்ணின் உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்