பொதுமக்களிடம் ரூ.5 கோடி ஏமாற்றம்? - நிறுவன உரிமையாளர்கள் 10 பேர் கைது - குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
- கரூரில் பொதுமக்களிடம் ஐந்து கோடி ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றிய புகாரில் நிதி நிறுவன உரிமையாளர்கள் 10 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
- வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவ பார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் நடத்தி வந்துள்ளனர்.
- இந்நிலையில், தங்கள் நிறுவனங்களில் டெபாசிட் செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
- இது குறித்து 25க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
- இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார்,15 பேரில் 10 பேரை கைது செய்தனர்.
- அவர்களிடம் வெங்கமேடு பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
- இதையடுத்து, 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story