'தண்டனை கொடுத்தா 1 கோடி பரிசா...?' பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்.... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கரூர் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் ஒட்டியுள்ள அந்த சுவர் விளம்பரத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத் தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசும், பாராட்டு விழாவும் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த போஸ்டர் அப்பகுதி மக்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
Next Story