கடலுக்குள் அமையும் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் - வெளியான மாதிரி படம்..

x

சென்னை மெரினாவில் கடலுக்குள் அமைய உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் கிரானைட் கற்கள் பயன்படுத்தவும், நினைவுச் சின்னத்தில் கருணாநிதி கூறிய கருத்துக்கள் கல்வெட்டாக பொறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவுச் சின்னத்தை நோக்கி செல்லும் பாலம், அலைகளை பிரதிபலிக்கும் வகையிலும், நினைவுச் சின்னத்தை சுற்றியுள்ள கட்டுமானம் சிக்குக் கோலம் வடிவிலும் அமைக்கப்பட உள்ளதாக வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்