கருணாநிதியின் 100வது பிறந்த நாள்... திமுக சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
சென்னை கேகே நகரில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் டெக் மகேந்திரா, அசோக் லேலண்ட், டிவிஎஸ் சதர்லேண்ட், அப்பல்லோ டயர்ஸ் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் 2300க்கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ பிரபாகர்ராஜா, சென்னை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தனசேகரன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், 136வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிலவரசி துரைராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.