கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துகள் முடக்கம்

x

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை பெற, ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில, கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 11 கோடியே 4 லட்சம் மதிப்புடைய. 3 அசையும் சொத்துக்களையும், ஒரு அசையா சொத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்