ஆபாச படம் காட்டி, மாணவிகளிடம் ஏடாகூடமான கேள்வி கேட்ட ஆசிரியர்...
கர்நாடக மாநிலம் கோலார் தாலுகா நரசாபுர கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வகுப்பறையில் பாடம் எடுத்தபோது மாணவிகளிடம் அந்தரங்கமான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். பின்னர் அது குறித்து விளக்கிப் பேசியதோடு ஆபாச படங்களை காட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை மாணவிகள் தங்கள் பெற்றோர் வசம் தெரிவிக்கவே, அவர்கள் கோபத்தில் பள்ளிக்கு சென்று ஆசிரியர் பிரகாஷை அடித்து உதைத்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சூழலில் விசாரணையும் நடந்து வருகிறது.
Next Story