வாக்காளர்களுக்கு கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் பரபரப்பு கடிதம்
கர்நாடக மாநில த்தில் அரசு பணி ஒப்பந்தத்தை வழங்க 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு சங்கங்களாக கர்நாடக அரசுக்கு எதிராக பகிரங்க ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் 40 சதவீத கமிஷன் அரசால் உயிருக்கு உலை வைத்து கொள்ளாதீர்கள் என வாக்காளர்களுக்கு கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.ஊழலின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பல ஒப்பந்ததாரர்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாளை காலை வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில் கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வாக்காளர்களுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story