கள்ளக்காதலியை தீ வைத்து எரித்த நபரை திருப்பி தாக்கிய "கர்மா"... உடனுக்குடன் உடன் நடந்த பயங்கரம்
வேலூரில் பெண்ணை தீ வைத்து எரித்த கூலித்தொழிலாளியும் தீக்காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ். முள்ளிபாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். இதனிடையே இவரது வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வரவே, அப்பகுதி மக்கள் உடனே போலீசில் தகவல் தெரிவித்தனர்.
அப்போது ரமேஷ் தீயில் எரிந்த படி அங்கிருந்து சாலையை நோக்கி ஓடினார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, தீயில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், வேலூர் கோட்டை அகழியில் தீக்காயங்களுடன் கிடந்த ரமேஷூம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில் அந்த பெண் திலகவதி என்பதும், தகாத உறவில் இவர்கள் இருந்ததும் உறுதியானது.
இதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திலகவதி உயிரிழந்தார்.